சைஃப் அலிகானுக்கு சொந்தமான 800 கோடி மதிப்புள்ள அரண்மனை பற்றி தெரியுமா ?
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் வீட்டில் நடந்த கொள்ளையின் போது கத்தியால் குத்துபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 2:30 மணியளவில் சைஃப் அலிகான் வீட்டில் திருட வந்த திருடர் அவரை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். நான்கு இடத்தில் பலமாக குத்துபட்ட சைஃப் அலிகா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் ஆபத்தான கட்டத்தை கடந்துள்ளதாக மருத்துவார்கள் தெரிவித்துள்ளார்கள்
பாலிவுட் நடிகை கரீனா கபூரை இரண்டாவது திருமணன் செய்துகொண்டார் சைஃப் அலிகான். அவரது முதல் மனைவி அம்ரிதா சிங்குடன் இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது கரீனாவுடன் அவருக்கு இரண்டு குழந்தைகள் என மொத்தம் நான்கு குழந்தைகளுக்கு தந்தை சைஃப் அலி கான்
ஒரு பக்கம் கபூர் குடும்பத்தின் மருமகன் இன்னொரு பக்கம் நான்கு குழந்தைகளின் தந்தை , மறுபக்கம் நடிப்பு என பாலிவுட் பிஸ்யான நடிகர்களில் ஒருவர் சைஃப் அலி கான்
சைஃப் அலிகானின் தந்தை மன்சூர் அலிகான் பட்டோடி ஆவார். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார்.
தனது தந்தையின் வழியாக சைஃப் அலிகானுக்கு பூர்வீக அரண்மனை வந்து சேர்ந்தது. இந்த அரண்மனை குர்காவில் உள்ளது. இதன் மொத்த சொத்து மதிப்பு 800 கோடியாகும்
10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனையில் மொத்தம் 150 அறைகள் இந்த அரண்மனையில் உள்ளன. விளையாட்டு மைதானங்கள் , பழமையான பொருட்கள் , ஓவியங்கள் , கலை களஞ்சியங்களால் நிறைந்துள்ளது இந்த அரண்மனை. ஷாருக் கான் நடித்த வீர் ஸாரா , ரன்பீர் கபூர் நடித்த அனிமல் ஆகிய திரைப்படங்கள் இந்த அரண்மனையில் எடுத்தவை. இதுதவிர்த்து தனது குடும்ப நிகழ்வுகளுக்காக இந்த அரணமனையை பயண்படுத்தி வருகிறார் சைஃப் அலிகான்