Keerthi Pandian: சிம்பிள் சேலையில் கணவர் அசோக் செல்வனுடன் கீர்த்தி பாண்டியன் கொண்டாடிய ரொமான்டிக் பொங்கல்!
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி பாண்டியன். இவர், வேறு யாமில்லை நடிகர் அருண் பாண்டியனின் மகள் தான். இளஞ்சோடிகள் படம் மூலமாக சினிமாவில் கால் பதித்தவர் நடிகர் அருண் பாண்டியன். சிதம்பர ரகசியம், ஊமை விழிகள், இணைந்த கைகள் ஆகிய படங்கள் அருண் பாண்டியனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
ஒரு நடிகர் மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருந்தார். செந்தூர பூவே படத்தை தயாரித்தார். கடைசியாக 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அன்பிற்கினியாள் படத்தை தயாரித்தார். அருண் பாண்டியனுக்கு கவிதா பாண்டியன், கிரண பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் என்று 3 மகள்கள் இருக்கிறார்கள்.
தும்பா படம் மூலமாக அறிமுகமான கீர்த்தி பாண்டியனுக்கும், அசோக் செல்வனுக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த ஆண்டு இருவரும் தல பொங்கலை கொண்டாடிய நிலையில், இந்த ஆண்டு 2ஆவது பொங்கலை கொண்டாடியுள்ளனர்.
பொங்கல் பண்டியான நேற்று கீர்த்தி பாண்டியன் தனது கணவர் அசோக் செல்வனுடன் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் கீர்த்தி பாண்டியன் பிங்க் நிறத்தில் எளிமையான சேலை அணிந்துள்ளார். அசோக் செல்வன் லைட் கிரே கலரில் சட்டையும், வெள்ளை நிற வேஷ்டியும் அணிந்துள்ளார். இருவரும் இணைந்து ஒன்றாக போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கீர்த்தி பாண்டியன் தும்பா, அன்பிற்கினியாள், கண்ணகி, ப்ளூ ஸ்டார், கொஞ்சம் பேசினால் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதே போன்று அசோக் செல்வனும் சூது கவ்வும் படத்தில் ஆரம்பித்து, பீட்சா 2, தெகிடி, ஆரஞ்சு மிட்டாய், சவாளே சமாளி, 144, பொன் ஒன்று கண்டேன், எமக்கு தொழில் ரொமான்ஸ், தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.