Pooja Kannan Wedding:சாய் பல்லவி தங்கை பூஜா - வினீத் திருமண கொண்டாட்டம் - வைரல் புகைப்படங்கள்!
நடிகை சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணனின் திருமணம், படுகர் இன முறைப்படி, உறவினர்கள், நண்பர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளார். இவை சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதென்னிந்திய நடிகைகளில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. அவரது தங்கை பூஜா கண்ணன் 'சித்திரை செவ்வானம்' எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். அதன் பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில், இவர் தனது காதலர் வினீத்தை திருமணம் செய்து கொண்டார்.
சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனுக்கு வினீத்துடன் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அவர்களின் திருமணத்துக்கு முன்னதான கொண்டாட்டங்கள் சமீபத்தில் நடைபெற்றது. இப்போது படுகர் இன முறைப்படி திருமணம் நடந்து முடிந்துள்ளது.
பூஜா - வினீத் இருவரின் திருமணத்தில் சாய் பல்லவியின் புடவை, அவர் தங்கையின் திருமணத்தை கொண்டாடிய விதம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.
பூஜா தனது திருமணத்தின் போது ஆனந்தக் கண்ணீருடன் புதிய வாழ்க்கையை வரவேற்றத்து ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.
அக்கா சாய் பல்லவி செல்ஃபிக்கள் மற்றும் சோஷியல் மீடியா பதிவுகள் மூலம் தொடர்ந்து பூஜா லைம்லைட்டிலேயே இருந்து வருகிறார். இப்போது திருமணம் முடிந்து கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார். ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றார்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -