Aditi Rao Hydari- Siddharth:சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்பட தொகுப்பு - க்யூட் க்ளிக்ஸ்!
நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் திருமணம் செய்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇயக்குநர் மணிரத்னத்திடம் அசிஸ்டண்ட் இயக்குநராக தன் சினிமா பயணத்தைத் தொடங்கி, இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சித்தார்த், தொடர்ந்து தெலுங்கு, தமிழ் சினிமாக்களில் டாப் நடிகராக உயர்ந்தார்.
தென்னிந்திய சினிமாக்கள் தாண்டி பாலிவுட்டிலும் கால் பதித்து கவனமீர்த்த சித்தார்த், நடிப்பு தாண்டி, பாடகர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முகத் திறமையாளராக வலம் வந்து தன் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
சித்தார்த் - அதிதி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 2021ஆம் ஆண்டு ‘மகா சமுத்திரம்’ எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்தது முதல் இருவரும் காதலித்து வருவதாகத் தகவல்கள் பரவி வரும் நிலையில், நேரடியாக இருவரும் இதுவரை தங்கள் காதலை உறுதிப்படுத்தவில்லை
இருவரும் தங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்டதை வெளிப்படையாகத் தெரிவிக்கும் விதமாக கடந்த மார்ச் 28 அன்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தனர். விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியிடுவோம் என்றும் கூறியிருந்தனர்.
இன்று நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் தெலங்கானா மாநிலத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -