Richard Yashika : நடிகர் ரிச்சட் ரிஷிக்கும் நடிகை யாஷிக்காவிற்கும் இடையே காதல் இல்லையா?
நடிகர் ரிச்சர்ட் ரிஷி 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த காதல் வைரஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் ஷாலினியின் சகோதரர் ஆவார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் தொடர்ந்து நடித்த படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை. பின் 2020 ஆம் ஆண்டில் திரௌபதி, 2021 ஆம் ஆண்டில் ருத்ர தாண்டவம் என தொடர்ச்சியான ஹிட்களை கொடுத்தார்.
சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ரிச்சர்ட் ரிஷி தனது இன்ஸ்டா பக்கத்தில் பெண் ஒருவர் தன்னை முத்தம் இடுவது போல் போட்டோ ஒன்றைப் பதிவிட்டார்.
இப்புகைப்படம் இணையவாசிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து யாஷிகாவுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார் நடிகர் ரிச்சர்ட்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் ரிச்சர்ட் - யாஷிகா இருவரும் உண்மையாகவே காதலிக்கிறார்களா? அல்லது ஏதேனும் படத்தில் ஜோடியாக நடிக்கிறார்களா? எனக் கேள்வி எழுப்பினர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரிச்சர்ட் ரிஷி, யாஷிகாவுடன் இருக்கும் புகைப்படத்துடன் (cut)என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -