✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ram Charan Networth: 40-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ராஜா வீட்டு கன்னுகுட்டி... ராம் சரணின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மணிகண்டன்   |  27 Mar 2025 10:59 PM (IST)
1

வலுவான சினிமா பின்னணியை கொண்டு, திரையுலகில் முன்னணி நடிகரானவர் தான் ராம் சரண். சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து தரமான கதைகளை இவர் தேர்வு செய்து நடித்து வந்ததன் பலனாகவே, மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் என்கிற இடத்தை பிடித்தார்.

2

RRR படம் மூலமாக பான் இந்தியா நடிகராக மாறினார் ராம் சரண். எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த இந்த படம் ராம் சரணை உலக அளவில் பிரபலமாக்கியது. இதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், இவர் கடைசியாக நடித்த, 'கேம் சேஞ்சர்' பெரியளவில் வரவேற்பு பெறவில்லை.

3

தற்போது Peddi மற்றும் RC 17 (தற்காலிகமான பெயர்) ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

4

இந்த நிலையில் தான் இவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 1370 கோடி என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஹைதராபாத்தில் இவருக்கு சொந்தமாக ரூ.30 கோடிக்கு ஆடம்பர சொகுசு வீடு இருக்கும் நிலையில், ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் ரூ.38 கோடி மதிப்பில் 25 ஆயிரம் சதுர அடியில் பங்களா ஒன்றும் உள்ளதாம்.

5

இந்த பங்களாவில் உள்ள அலங்கார பொருட்கள் எல்லாமே வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது. தோட்டம் ஒன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. நீச்சல் குளம், ஜிம் பயிற்சி கூடம், மினி தியேட்டர் என்று எல்லா வசதிகளுடன் இந்த பங்களா கட்டப்பட்டிருக்கிறது.

6

ஒரு விமான நிறுவனத்தையும் வைத்திருக்கிறார் ராம் சரண். இந்த பங்களா வீட்டில் தான் ஒவ்வொரு பண்டிகையையும் அவர் கொண்டாடுவாராம். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட ராம் சரண் வீட்டிற்குள் கோவில் ஒன்றையும் காட்டியுள்ளார்.

7

இது தவிர ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600, ஆஸ்டன் மார்டின் வி8 வாண்டேஎஜ் போன்ற சொகுசு கார்களும் வைத்திருக்கிறாராம். சொந்தமாக ரூ.200 கோடி மதிப்பில் ஒரு கட்டுமான நிறுவனத்தையும் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி ஆடம்பர வாழ்க்கை வாழும் ராம் சரண் தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டாராகவும் ஜொலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

8

ராம் சரணின் சொத்து மதிப்பு, தமிழ் திரையுலக பிரபலங்களான ரஜினி, விஜய், அஜித், கமல் போன்ற முன்னணி பிரபலங்களை விட மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Ram Charan Networth: 40-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ராஜா வீட்டு கன்னுகுட்டி... ராம் சரணின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.