Manoj Bharathiraja: மனோஜ் பாரதிராஜா மறைவு - திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி!
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் நேற்று (25.03.2025) காலமானார். இவரது உடல் நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டது. அவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செய்தனர். நடிகர் சூர்யா பாரதிராஜாவிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாரதிராஜாவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நடிகர் சத்யராஜ், இயக்குநர் பேரரசு... இயக்குநர் பேரரசு பகிர்ந்த இரங்கல் குறிப்பில், தந்தை மகனுக்குக் கொள்ளி வைத்தது போன்ற துயரம் யாருக்கும் நடக்கக்கூடாது. என்று பேரரசு தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் சீமான், நடிகர் விஜய் சேதுபதி, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
பாரதிராஜா மகன் மனோஜ் உடலுக்கு தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மனோஜ் பாராதிராஜாவிற்கு இயக்குநர் மணிரத்னம், நடிகை சுஹாசினி, நடிகர் நாசர் நேரில் அஞ்சலி,
நடிகை ராதிகா.. நடிகர் சரத்குமார்... நடிகர் விதார்த், இயக்குநர் பி.வாசு ஆகியோர் நேரில் மரியாதை செலுத்தினர்.
மனோஜ் பாரதிராஜாவுக்கு சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது இழப்பு பாரதிராஜா குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தம்பி ராமைய்யா..சரவணன்.. நடிகர் சத்யராஜ்..
நடிகர் பாண்டியராஜன் ... தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மனோஜ் பாரதிராஜா உடலுக்கு நேரில் மரியாதை செலுத்தினர்.