Jailer Hukum Preview : ரஜினி ரசிகர்களுக்கு புதிய அப்-டேட் கொடுத்த ஜெயிலர் படக்குழு - இன்று மாலை வெளியாகும் ஹூக்கும் பாடலின் பிரிவியூ விடியோ !
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சுனில், வசந்த் ரவி, விநாயகன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கடந்த வாரம் இப்படத்தின் முதல் சிங்கிள் ’காவாலா’ என்ற பாடல் வெளியானது. இப்பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டானது.
இப்படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஹூக்கும்’ எனும் இரண்டாவது பாடல் குறித்தான பிரிவியூ விடியோ இன்று மாலை வெளியாகவுள்ளது.
இந்த அப்-டேட் வந்ததில் இருந்து ரஜினி ரசிகர்கள் இதனை இனையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -