Actor Kavin : டாடா நடிகர் கவினின் கைவசம் உள்ள படங்களின் பட்டியல்!
பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பங்குபெற்று பிரபலமான கவினின் கையில் இருக்கும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
ஓடிடியில் வெளியான லிப்ட் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நடிகர் கவின் மற்றும் அமிர்த ஐயர் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
திரையரங்குகளில் வெளியான டாடா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை கணேஷ் இயக்கியிருந்தார். கவின் மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் காதலர்கள் தினத்தை முன்னிட்டு கவின் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படம் வெளியாகவுள்ளது.
நடிகர் கவின் 'கிஸ்' என்ற தலைப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் தற்போது நடித்துவருகிறார்.இத்திரைப்படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் நெல்சன் திலீப் குமாருடன் நடிகர் கவின் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன