Happy Birthday Kavin : கனா காணும் காலங்கள் டூ டாடா.. வளர்ந்து வரும் நடிகர் கவினுக்கு இன்று பிறந்தநாள்!
நடிகர் கவின் 1990 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் பிறந்தார்.கல்லூரி காலம் முதல் நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட கவின் படிப்பு முடிந்த பின் கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயின்றார்.
பின்னர் 2011ல் கனா காணும் காலங்கள் எனும் சீரியலில் நடித்தார்.
அதை தொடர்ந்து ஆல்டைம் பேவரைட் சீரியல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சியின் முதல் சீசனில் முருகன் எனும் கதாபாத்திரத்திலும், 2வது சீசனில் வேட்டையன் எனும் கதாபாத்திரத்திலும் நடித்தார்.
மேலும் பிக் பாஸில் 3வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பீட்சா, இன்று நேற்று நாளை , சத்ரியன் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார்.
பின்னர் கொரோனா காலகட்டத்தில் வெளியான லிஃப்ட் படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். சமீபத்தில் வெளிவந்த டாடா படம் சூப்பர் ஹீட் ஆனது. இதனையடுத்து கவினுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.