Dulquer Salmaan : “நீ, நீயாக இருப்பதற்கு நன்றி..லவ் யூ”மனைவிக்கு க்யூட்டாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன துல்கர் சல்மான்!
மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் மலையாளம், தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டு அமல் சூஃபியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மரியம் அமீரா சல்மான் என்ற 8 வயது பெண் குழந்தையும் உள்ளது.
வருடாவருடம் தனது மனைவி அமல் பிறந்தநாள் அன்று புகைப்படங்களை பதிவிட்டு க்யூட்டான வாழ்த்தை தெரிவிப்பது துல்கரின் வழக்கம்.
இந்த வருடமும் அமலின் பிறந்தநாளான இன்று துல்கர் இருவரும் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்தில் “ எங்கள் வீட்டில் ஒலிக்கும் ஒலிகளில் பெரும்பாலனவை ‘ஆம்..அம்மா..’ நீ எவ்வளவு சோர்வாக இருந்தாலும் எங்களுக்காக உழைக்க ஒரு போதும் தவறியதே இல்லை..நீ, நீயாக இருப்பதற்கு நன்றி..லவ் யூ ஆம்..” என தெரிவித்துள்ளார்.
கூடுதலாக நடிகை நஸ்ரியாவும் அமல் சல்மானுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.