Dhanush Movie Lineup : இன்னும் ரெண்டு வருஷத்துக்கு சின்ராச கைலயே புடிக்க முடியாது..அடுத்தடுத்து பிஸியாக நடிக்கவிருக்கும் தனுஷ்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நடிகர் தனுஷ் அடுத்த இரண்டு வருடங்களில் நடிக்கவுள்ள திரைப்படங்களின் பட்டியல் இதோ..!
கேப்டன் மில்லர் - அருண் மாத்தேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
D50 - நடிகர் தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்மூலா இயக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாம் முறையாக மாரி செல்வராஜுடன் இணைகிறார் நடிகர் தனுஷ்.
ராஞ்சனா, அத்ரங்கீரே திரைப்படத்திற்கு பிறகு மூன்றாம் முறையாக ஆனந்த்.எல்.ராயுடன் தனுஷ், தேரே இஷ்க் மேன் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
கேப்டன் மில்லருக்கு பிறகு இரண்டாம் முறையாக அருண் மாத்தேஷ்வரனுடன் கைக்கோர்க்க இருக்கிறார் தனுஷ்.