500 Crore Club : கோடிகளை அள்ளும் கோலிவுட்டின் சூப்பர் காம்போ.. இதுவரை 500 கோடி வசூலை எட்டிய தமிழ் படங்கள்!
என்னத்தான் ஒரு திரைப்படம் நல்ல கதை, சிறந்த கலைஞர்கள் கொண்டு சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அப்படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனை பொறுத்துதான் அதன் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅவ்வாறு தமிழில் பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், சில படங்களே ரூ.500 கோடி என்ற பெரிய இலக்கை தொட்டுள்ளது.
அந்த பெரிய மைல்கல்லை தொட்ட தமிழ் படங்கள் குறித்து இங்கு காண்போம்!
2.0 - 2018 ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0, 2018 ஆம் ஆண்டில் வெளியானது. ரூ. 540 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 750 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதன் மூலம் 500 கோடி ரூபாயை வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது 2.0.
பொன்னியின் செல்வன் - 2022 மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். 250 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகமே 500 கோடி வசூல் செய்து தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை ஈட்டி கொடுத்தது.
ஜெயிலர் - 2023 நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆக்ஸ்ட் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெய்லர். 200 பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படும் இத்திரைப்படம் வெளியான பத்தே நாட்களில் 500 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படம் 500 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனை தொட்ட இரண்டாவது ரஜினிகாந்தின் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -