IND Vs IRE : அதிரடியாக ஆடி அயர்லாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியா!
இந்தியா-அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆரம்பம் முதலே இந்திய அணி அதிரடியாக ஆட ஆரம்பித்தது. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட்சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.
பின்னர் வந்தவர்கள் அவர்கள் கடமையை சரியாக செய்ததால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தனர்.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி தொடக்கத்திலேயே சரிவை சந்திக்க ஆரம்பித்தது.
ஆண்டி பால்பிர்னி மட்டும் ஒரு முனையில் சிறப்பாக விளையாட மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்
20 ஓவர் முடிவில் அயர்லாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது தோல்வி அடைந்தது. தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்த இந்தியா 2-0 என்ற கணக்கில் இந்த தொடரை வென்றது.