Dhanush 51: பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு தனுஷ் கொடுத்த ட்ரீட்..D51 அப்டேட்டால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் தனுஷ். இன்று தனுஷ் தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்நிலையில் தனுஷின் 51 ஆவது படம் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனுஷின் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரிக்கிறது.
ஏற்கனவே தனுஷின் ’வாத்தி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.அதை தொடர்ந்து தெலுங்கு இயக்குநருடன் கைக்கோர்த்திருக்கும் தனுஷின் 51 ஆவது திரைப்படம் பான் இந்தியா அளவில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படம் குறித்த தகவல்கள் ஏற்கனவே பரவி வந்தாலும் கூட தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது போஸ்டருடன் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு.
இன்று தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.மேலும் முன்னதாக தனுஷின் 50 ஆவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -