Vidamuyarchi Update : வாடிய அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த விடாமுயற்சி படக்குழு!
ஜோன்ஸ் | 12 Jul 2023 05:45 PM (IST)
1
தடையற தாக்க தொடங்கி கலகத் தலைவன் வரை திரைப்படங்கள் இயக்கி, தன் தனித்துவ ஆக்ஷன் பாணி படங்களால் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குநர் மகிழ் திருமேனி.
2
இவர் முதன்முறையாக கோலிவுட் டாப் நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித் உடன் இணையும் திரைப்படம் விடாமுயற்சி.
3
லைகா நிறுவனம் இப்படத்தை இயக்கும் நிலையில், அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
4
இப்படத்தில் ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களின் வரிசையில் நடிகர் அஜித் உடன் 5ஆவது முறையாக த்ரிஷா இணைவதாகவும் தகவல்கள் வெளியான
5
விடாமுயற்சி திரைப்படம் ஜூன் மாதமே தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால் தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய் வந்தன.
6
தற்போது இப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக நெருங்கிய திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன