விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர் சூட்டிய ஆமிர் கான்...எமோஷ்னலான குடும்பத்தினர்..நெகிழ வைக்கும் ஃபோட்டோஸ்
விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா கட்டா தம்பதியினருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆவது பெண் குழந்தை பிறந்தது.
இன்று ஹைதராபாதில் தனது மகளின் பெயர் சூட்டு விழாவை கொண்டாடினார் விஷ்ணு விஷால்.
இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகர் மற்றும் விஷ்ணு விஷாலின் நண்பரான நடிகர் ஆமிர் கான் கலந்துகொண்டார்
விஷ்ணு விஷாலின் மகளுக்கு 'மிரா' என்று ஆமிர் கான் பெயர் சூட்டினார்
'மிரா' என்றால் அளவுகடந்த அன்பு மற்றும் அமைதி என்று பொருள்
இந்த நிகழ்வில் பேசிய விஷ்ணு விஷாலின் மனைவி மகிழ்ச்சியில் கண் கலங்கினார்
விஷ்ணு விஷால் மற்றும் ஆமிர் கான் இடையில் நீண்ட காலமக நெருங்கிய நட்பு இருந்து வருகிறது
சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது நடிகர் ஆமிர் கான் தனது அம்மாவின் சிகிச்சைக்காக சென்னை வந்திருந்தார். அப்போது வெள்ளத்தில் சிக்கிய ஆமிர் கான் மற்றும் விஷ்ணு விஷாலை நடிகர் அஜித் குமார் உதவியுடன் மீட்டனர்.
ஆமிர் கானுடன் இதுவரையிலான உறவு ஒரு மேஜிக்கலான அனுபவமாக இருந்திருக்கிறது என விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
இந்த நிகழ்வின் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன