Santhanam : காமெடியன் டூ ஹீரோ.. 9 ஆண்டுகளுக்கு முன் கதாநாயகனாக களமிறங்கிய சந்தானம்!
லொள்ளு சபாவில் தனது பயணத்தை ஆரம்பித்த சந்தானத்திற்கு, நடிகர் சிம்பு தனது மன்மதன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சந்தானம், அடுத்தடுத்த படங்களில் நடித்து சினிமாவில் அவருக்கான இடத்தை பிடித்தார்.
பெரும்பாலாக வடிவேலுவும் விவேக்கும் நடிக்கும் காமெடி காட்சிகள் படத்தின் கதையிலிருந்து தனி ட்ராக்கில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் சந்தானம், கதாநாயகனின் நண்பராகவோ, எதிரியாகவோ நடித்து படக்கதையில் முக்கிய பங்கு வகித்து வந்தார்.
அடுத்தடுத்த கவுண்டர்களை கொடுப்பதிலும், மற்றவர்களை கலாய்த்து கதி கலங்க வைப்பதிலும் ஜாலனாக வலம் வந்தவர் சந்தானம்.
காமெடி சூப்பர் ஸ்டார் என்று மக்களால் அழைக்கப்பட்ட இவர், காலம் காலமாக சினிமா உலகில் ஒட்டிக்கொண்டிருந்த காமெடியன் டூ ஹீரோ ட்ரெண்டை பின்பற்றினார்.
முதன் முதலாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக அறிமுகமான போதும், அவரின் காமெடி சென்ஸை ஒருபோதும் விட்டிக்கொடுக்கவில்லை. தொடர்ந்து, காமெடியை மையமாக வைத்து நகரும் கதைக்களத்தை தேர்வு செய்து வந்த இவர், ஹீரோ என்றால் மாஸாக க்ளாஸாக இருக்க வேண்டும் என்பதை மறக்க வைத்து தனக்கான பாதையை அமைத்துக்கொண்டார்.
அவரை மிஸ் செய்யும் ரசிகர்கள் சிலர், சந்தானம் ஹீரோவாகவே இருந்திருக்கலாம் என்று அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.