Indru Netru Naalai : இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை... 9 ஆண்டுகள் நிறைவு செய்யும் விஷ்ணு விஷாலின் படம்!
திருக்குமரன் என்டர்டைன்மெண்ட், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த படம் இன்று நேற்று நாளை.
படத்தில் ஆர்யா, மியா ஜார்ஜ், கருணாகரன், முனீஷ்காந்த், பி ரவி ஷங்கர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இது தமிழ் சினிமாவில் வெளிவந்த சைன்டிபிக் படங்களில் ஒன்றாகும்.
எதிர்காலத்தில் இருந்து டைம் மிஷினை, கடந்த காலத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கிறார் ஆர்யா . அந்த டைம் மிஷின் விஷ்ணு விஷால், கருணாகரன் கையில் சிக்கிக் கொள்கிறது. அந்த மிஷினை வைத்து இருவரும் என்னென்ன செய்கிறார்கள், அதனால் ஏற்படும் பிரச்சனையிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.
விஷ்ணு விஷால் - மியா ஜார்ஜிற்கு இடையேயான லவ் ட்ராக் நன்றாக வொர்க்- அவுட் ஆகி இருக்கும்.
படத்தின் பிளஸ் என்றால் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங். கதையோடு இந்த மூன்றும் ஒன்று சேரும் போது தான் படத்தை முழுமையாக ரசிக்க முடியும். அந்த வகையில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, வசந்த், லியோ ஜான் பால் ஆகியோர் அவர்களின் வேலையை சிறப்பாக செய்து இருந்தனர்.
இன்று நேற்று நாளை திரைப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.