9 Skin Launch : பிஸினஸ் உலகில் புதிய தடம் பதித்த நயன்தாரா!
முன்னணி ஹீரோக்களுடன் நடித்து சினிமா உலகில் இன்றளவும் டாப் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா.
காலத்திற்கு தேவைப்படும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, எப்போதும் தன்னை அப்டேட்டாக வைத்துக்கொள்கிறார்.
சினிமாவை அடுத்து, பிசினஸ் உலகிலும் கால் பதித்துள்ளார். முன்னதாக, தி லிப் பாம் கம்பேனி எனும் லிப் கேர் பிராண்டை டாக்டர் ரெனிடா ராஜனுடன் சேர்ந்து தொடங்கினார்.
அதைதொடர்ந்து 9 ஸ்கின் எனும் புதிய ஸ்கின் கேர் பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த பிராண்டை நயன், விக்கி மற்றும் டெய்ஸி மார்கன் என்பவரும் நடத்தி வருகின்றனர்.
செப்டம்பர் 29ஆம் தேதியன்று பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இந்த திறப்பு விழாவில் ராதிகாவும் சரத்குமாரும் கலந்து கொண்டுள்ளனர்.அட்லீ, பிரியா அட்லீ உள்ளிட்ட பிரபலங்களும் நயன் - விக்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நயன்-விக்கி, செப்டம்பர் 26 ஆம் தேதியன்று உயிர் மற்றும் உலகின் பிறந்தநாளை மலேசியாவில் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.