Anirudh Ravichander : அனிருத் பற்றி உங்களுக்கு இது தெரியுமா? ஸ்வாரஸ்யமான சில தகவல்கள் இதோ!
மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இன்றைய தலைமுறைக்கு ஏற்ற ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்தவர் அனிருத்.
ஏ.ஆர். ரஹ்மான் முதல் அறிமுக இசையமைப்பாளர் வரை யாருடைய இசையில் பாடுவதாக இருந்தாலும் அதற்கு அனிருத் சம்பளம் வாங்குவதில்லை.
வேதாளம் படத்தில் இடம்பெற்ற 'ஆலுமா டோலுமா' பாடலை விருப்பமே இல்லாமல் இயக்குநரிடம் கொடுத்துள்ளார். ஸ்கிராப்பில் சேர்க்க இருந்த பாடல் எதிர்பாராதவிதமாக சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
கை கால் அசைவு இல்லாமல் இருந்த ஒரு சிறுவனுக்கு 'கத்தி' படத்தில் இடம் பெற்ற செல்ஃபி புள்ள பாடலை கேட்டதும் அசைவுகள் தென்பட்டுள்ளது. அதனால் அந்த பாடலை வைத்தே சிகிச்சை தரப்பட்டு பின்னர் அவன் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளான்.
'3' படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டு வைரலானது. ஆனால் அது திட்டமிடப்படாத ஒன்று. பாடலின் ரஃப் ரெக்கார்டிங் லீக்கானதால் வேறு வழியில்லாமல் யூடியூபில் வெளியிட வேண்டிய காட்டாயம் ஏற்பட்டது.
இந்திய அளவில் அதிகமாக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் முதலிடத்தில் இருப்பவர் அனிருத். ஜவான் படத்திற்காக அவர் 10 கோடி சம்பளமாக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.