Birthday Celebrities : அர்னால்ட் முதல் வர்ஷா வரை.. இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரை நட்சத்திரங்கள்!
தமிழ் நாட்டின் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் சாம் சி எஸ். இவர் கைதி, விக்ரம் வேதா, அடங்க மறு போன்ற பல ஹிட் படங்களுக்கு இசை அமைத்திருந்தார். இன்றுடன் இவருக்கு 37 வயதாகிறது.
வர்ஷா போலாமா சதுரன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிகில், 96 , செல்ஃபி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இன்றுடன் அவருக்கு 28 வயதாகிறது.
பிரபல நடிகரான சோனு சூத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார். இன்றுடன் அவருக்கு 51 வது வயதாகிறது.
பிரபல பாடகரான சோனு நிகம் இதுவரையிலும் 10 மொழிகளில் 4000 - திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு இன்றுடன் 51 வயதாகிறது.
பிரபலமான அமெரிக்க திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கிறிஸ்டோபர் எட்வர்ட் நோலன், இன்செப்சன், மொமெண்ட்டோ, இன்டர்ஸ்டெலர், தி டார்க் நைட், ஓப்பன்ஹைமர் போன்ற பல பிரமாண்டமான படங்களை இயக்கியுள்ளார். இன்றுடன் 54 வயதை நிறைவு செய்கிறார்.
உடற்பயிற்சி செய்து விளம்பர மாடலாகி பின் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர். இவர் தி டெர்மினேட்டர், கமாண்டோ, பிரிடேட்டர், எஸ்கேப் பிளான் போன்ற உலக புகழ் பெற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இன்றுடன் அவருக்கு 77 வயதாகிறது.