Indian : ‘கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு..’ சுதந்திர காத்தை சுவாசித்து 27 ஆண்டுகளை கடந்த இந்தியன்!
ஜென்டில்மேன்,காதலன் படங்களை இயக்கிய ஷங்கர், இந்தியன் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரர் ஆனார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1996 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி வெளியான இந்தியன் படத்தில் கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். முதல்முறையாக கமலும் - ஷங்கரும் இப்படத்தில் இணைந்தனர்.
சுதந்திரப் போராட்ட தியாகியாகவும், ஊழல் செய்யும் மகனாகவும் என முரண்பட்ட இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கமல். லஞ்சம் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளால் கோவத்திற்கு உள்ளாகும் சேனாபதி தன் மகனான சந்துருவை கொள்ள முயற்சிப்பார். இறுதியில் சேனாபதியின் என்ன முடிவு எடுக்கிறார் என்பதே க்ளைமாக்ஸ்.
இன்றைய இந்தியா முழுமைக்கும் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழலுக்கு எதிராக எடுக்கப்படும் படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதில் முன்னோடியானது ‘இந்தியன்’ படம் .
இந்தியன் படம் கமலுக்கு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. இதற்காக மூன்றாம் முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அவர் பெற்றார். மாற்று சினிமா மட்டுமல்ல கமர்ஷியல் சினிமாவிலும் நான் ஹீரோ என்பதை கமல் நிரூபித்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -