Vijay Deverakonda : ‘பனிக்கூழ் இவன் பார்க்கும் பார்வையோ..’ ஊருக்கே ஐஸ் வைக்கும் விஜய் தேவரகொண்டா!
2011ல் திரையுலகில் என்ட்ரி கொடுத்த விஜய் தேவரகொண்டாவிற்கு, அர்ஜுன் ரெட்டி படம் புகழின் வெளிச்சத்தை கொடுத்தது. அதைத்தொடர்ந்து, இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் கவனத்தை பெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇணையத்தில் இவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகி வைரலானது. இதை வைத்து நெட்டிசன்கள் பல மீம்ஸ்களை பதிவிட்டனர்.
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர், தனது மாடலிங் புகைப்படங்களையும், தான் நடிக்கும் படத்தின் போஸ்டர்களையும், சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படங்களையும் ஷேர் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இவர் நடித்த லைகர் நெகடிவ் விமர்சனங்களை பெற்றாலும், அடங்காத சூறாவளியாய் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவர், ஹைதராபாத், விசாகபட்டினம், பெங்களூர், மும்பை, புனே, சென்னை, டெல்லி ஆகிய இடங்களில் “தி தேவரகொண்ட பர்த்டே ட்ரக்” என்ற வாகனத்தில் அனைவருக்கும் இலவசமான ஐஸ்கிரீமை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த வாகனங்களின் இருப்பிடத்தை விஜய் தேவரகொண்டா குறிப்பிடவில்லை. அதனால் அதிர்ஷடவசமாக இந்த வாகனங்கள் உங்கள் கண்களில் தென்பட்டால், இலவசமான ஐஸ்கிரீமை இன்று முழுக்க பெற்றுக்கொள்ளலாம்.
இந்த வாகனங்களின் இருப்பிடத்தை விஜய் தேவரகொண்டா குறிப்பிடவில்லை. அதனால் அதிர்ஷடவசமாக இந்த வாகனங்கள் உங்கள் கண்களில் தென்பட்டால், இலவசமான ஐஸ்கிரீமை இன்று முழுக்க பெற்றுக்கொள்ளலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -