26 years of Jeans : ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பு...வெற்றி கூட்டணியில் உருவான ஜீன்ஸ்!
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1988ம் ஆண்டு வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'ஜீன்ஸ்'.
பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர், லட்சுமி, செந்தில், ராதிகா சரத்குமார், ராஜு சுந்தரம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
அசோக் அமிர்தராஜ் தயாரிப்பில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 45 நாட்களும் உலகெங்கிலும் படமாக்கப்பட்டது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றும் சூப்பர் ஹிட் தான். சிறந்த இசைக்கான தேசிய விருதை பெற்றார்.
அதிசயம் பாடலுக்காக உலகின் ஏழு அதிசயங்களை ஒரே பாடலில் அடக்கி பிரமிக்க வைத்தார் இயக்குநர் ஷங்கர்.
71 வது ஆஸ்கர் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிராவில் பரிந்துரைக்கப்பட்டது.
பல அதிசயங்களை உள்ளடக்கிய இப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.