21 years of dhanush : ‘எனக்கு ராஜாவா நான் வாழுறேன்' மகுடம் சூடாத மன்னனாக கலக்கி வரும் தனுஷ்!
2002 ஆம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறையில் அறிமுகமானார் தனுஷ். வணிக ரீதியாக வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவன் காம்போவில் காதல் கொண்டேன் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் முதல் முதலில் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். அதை தொடர்ந்து புதுப்பேட்டை என்ற திரைப்படத்திலும் பாடினார். இவர் ‘பாடிய வொய் திஸ் கொலவெறி டி’பாடல் யூடியூபில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே வைரலானது.
தனுஷ், தமிழ்த் திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும், இயக்குநர் செல்வராகவனின் இளைய சகோதரரும் ஆவார். இவர் 2004ஆம் ஆண்டில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.
பிலிம்பேர் விருதுகளை குவித்த தனுஷ், வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவான ஆடுகளம் மற்றும் அசுரன் படங்களுக்காக 2011 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.
தனுஷ், வொண்டர் பார் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, படங்களை தயாரித்து வருகிறார். இவருடைய தயாரிப்பில் வெளிவந்த விசாரணை படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
தமிழ் சினிமாவை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -