2 Years of Don : இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யும் சிவகார்த்திகேயனின் டான்!
2022 ஆம் ஆண்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பிலும் நடிப்பிலும் வெளியான படம் டான்
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தனர். டான் படத்திற்கு இசையமைத்த அனிருத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டானது.
மகனாக வரும் சிவகார்த்திகேயன் தனக்குள் இருக்கும் திறமையை வைத்து வெற்றியடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அப்பா சமுத்திரக்கனிக்கு, படித்தால்தான் முன்னேற முடியும் என்ற முரண்பட்ட கருத்துடன் இருக்கிறார் . இருவருக்கும் நடக்கும் போராட்டத்தில் யார் ஆசை வெற்றியடைகிறது என்பதே படத்தின் கதை.
படத்தில் வரும் இடக்காவு அம்சான் நகைச்சுவை காட்சிகளுக்கு தியேட்டரில் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்தனர். 38 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 100 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்தது.
சிவகார்த்திகேயன் கெரியருக்கு ப்ளஸாக அமைந்த டான் படம் வெளியாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது.