Summer Vacation:குழந்தைகளின் கோடை விடுமுறை ஜாலியாக,பயனுள்ளதாக மாற்றுவது எப்படி?- டிப்ஸ்!
மாணவர்களை ஸ்மார்ட் போன், கேட்ஜெட்டுகளில் இருந்து விலக்கி, வேறு பணிகளில் ஈடுபடுத்துவது பெற்றோர்களுக்கும் கடுமையான பணியாகவே இருக்கிறது. இந்த நிலையில் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் செலவிடுவது எப்படி என்று பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகிணற்றில் நீச்சல், கிராம நண்பர்களுடன் கிரிக்கெட், தோட்டத்து விவசாயப் பணிகளில் உதவி, கோயில் திருவிழா, தாச்சாங்கல், பல்லாங்குழி, தாயம் என நேரம் சிட்டாய்ப் பறக்கும்.
தேபோல ஸ்கேட்டிங், ஷட்டில், பேட்மிண்டன், அத்லெட்டிக்ஸ் பயிற்சிகளிலும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
மூளைக்கு வேலை அளிக்கும் அபாகஸ், செஸ், கேரம்போர்டு வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்கலாம். மொழி ஆளுமையை வளர்க்க ஃபொனிக்ஸ் உச்சரிப்புப் பயிற்சி, ஸ்போக்கன் இங்க்லிஷ், இந்தி உள்ளிட்டவகுப்புகளில் சேர்க்கலாம்.
கோடை விடுமுறைக்கென்றே சில தனியார் நிறுவனங்கள் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. குறிப்பாக நீச்சல், நடனம் உள்ளிட்ட உடல் சார்ந்த பயிற்சி வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்க்கலாம்.
வாசிப்பில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். பெற்றோர் செல்போனையும் தொலைக்காட்சியையும் பார்த்தால், குழந்தைகளும் அதையேதான் செய்வார்கள். குழந்தைகள் முன்பு புத்தகங்களை எடுத்து வாசித்தால், அவர்களுக்கும் வாசிப்பில் ஆர்வம் ஊற்றெடுக்கும்.எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்/ பெண் பாலினம் தவிர்த்து, அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆபத்தில்லாத/ எளிமையான வீட்டு வேலைகளைக் கற்றுக் கொடுக்கலாம். நாம் செய்யும்போது உடன் அமர்த்தி, கற்பிக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -