Kanthaswamy Movie : கெட் - அப் போட்டு கலக்கிய விக்ரம்.. 15 ஆண்டுகளை நிறைவு செய்யும் கந்தசாமி படம்!
2009 ஆம் ஆண்டு சுசி கணேசன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவந்த படம் கந்தசாமி.
இப்படத்தில் ஸ்ரேயா சரண், வடிவேலு, ஆசிஷ் வித்யார்த்தி, பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
கருப்பு பணம் வைத்திருக்கும் பணக்காரர்களிடம் இருந்து சாமி வேடம் அணிந்து விக்ரம் பணத்தை கொள்ளையடித்து மக்களுக்கு நல்லது செய்து வருகிறார். இதை அறிந்த வில்லன் விக்ரமிடம் இருக்கும் பணத்தை தன்னிடம் கொடுக்குமாறு மிரட்டுகிறார். அதன்பிறகு விக்ரம் பணத்தை கொடுத்தாரா? வில்லனிடம் இருந்து தப்பிரதாரா? என்பதே மீத கதை.
இப்படத்தில் மியாவ் மியாவ், மாம்போ மாமிய, இதல்லாம் டூப்பு பாடல்களை விக்ரம் பாடி இருந்தார். மேலும் அலேக்ரா பாடல் மேக்கிங் சிறப்பாக அமைந்தது.
படத்தில் வடிவேலு காமெடி காட்சிகள் சிறப்பாக இருந்தது. குறிப்பாக வடிவேலு கந்தசாமி வேடத்தில் வரும் காட்சி, போலீஸ் ஸ்டேஷனில் குளிக்கும் காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்
விக்ரம் பல கெட் - அப்களில் கலக்கிய கந்தசாமி படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.