Deiva Thirumagal : 13 ஆண்டுகளை நிறைவு செய்யும் தெய்வத்திருமகள் படம்!
2011 ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த படம் தெய்வத்திருமகள்.
படத்தில் விக்ரம் அப்பாவாகவும், சாரா அர்ஜுன் மகளாகவும் நடித்து இருந்தனர்.
விக்ரம் மனநல குறைப்பாட்டுடன் இருப்பதால் அவரால் குழந்தையை வளர்க்க முடியாது என அமலா பால் அவரிடம் இருந்து குழந்தையை பிரித்து செல்கிறார். அதன் பிறகு விக்ரம், அனுஷ்காவை சந்தித்து வழக்கு தொடுகிறார். அந்த வழக்கில் ஜெயித்து குழந்தையை பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
படத்தில் அப்பா, மகள் காட்சிகள் ஜாலியாக இருக்கும். கிளைமாக்ஸில் விக்ரமின் நடிப்பு கண்கலங்க வைக்கும் அளவிற்கு உருக்கமாக இருக்கும்.
இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமாரின் இசை பக்கபலமாக அமைந்தது. படத்தின் ஆரிரோ, விழிகளில் ஒரு வானவில் பாடல்கள் மற்றும் பிஜிஎம் மிக சிறப்பாக இருக்கும்.
இன்றுடன் தெய்வத்திருமகள் படம் வெளியாகி 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.