11 Years Of Ambikapathy : பாலிவுட்டில் பிரவேசித்த தனுஷ்..11 வருடங்களை நிறைவு செய்யும் அம்பிகாபதி படம்!
ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஆனந்த் ராய் இயக்கத்தில் தனுஷ் பாலிவுட்டில்அறிமுகமான படம் ராஞ்சனா. இந்த படத்திற்கு தமிழில் அம்பிகாபதி என தலைப்பிடப்பட்டது.
சோனம் கபூர், அபய் தியோல், முகமது ஜீஷன் அய்யூப் மற்றும் ஸ்வரா பாஸ்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
காசியில் வாழும் இந்து பையன், இஸ்லாமிய பெண்ணை சிறு வயதில் இருந்து ஒருதலையாக காதலித்து வருகிறான். ஒரு கட்டத்தில் சோனம் கபூர், தனுஷின் காதலை ஏற்றுக்கொள்கிறார். அதன் பிறகு சோனம் கபூர் வெளியூருக்கு படிக்கச் சென்றுவிடுகிறார். அங்கு வேறு ஒரு பையனை சோனம் கபூர் விரும்புகிறார். இந்த காதல் கதை தனுஷுக்கு தெரிந்த பின் என்ன நடிக்கிறது என்பதே படத்தின் கதை.
இது ஒரு சிக்கலான கதையாக இருந்தாலும் இயக்குநர் திரைக்கதை அமைத்திருந்த விதம்தான் படத்தை வெற்றி பெற வைத்தது.
படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். அம்பிகாபதியா நீயும், கலாரசிக, உன்னால் உன்னால் என்ற பாடல்கள் ஹிந்தி மட்டுமல்லாமல் தமிழிலும் ஹிட் ஆனது.
சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை தனுஷ் பெற்றார். இன்றுடன் அம்பிகாபதி படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைகிறது.