10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் சிறப்பான எதிர்காலம் இருக்கு?
10-வது படித்து முடித்த மாணவர்களுக்கு முன்பு, 3 வாய்ப்புகள் உள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபள்ளிக் கல்வியை முடிப்பது… அதாவது 11, 12ஆம் வகுப்புகள் படிப்பது
டிப்ளமோ எனப்படும் பட்டயப் படிப்புகளை படிப்பது.
ஐடிஐ எனப்படும் தொழில் படிப்புகளைப் படிப்பது.
பள்ளிப் படிப்பை தேர்வு செய்பவர்கள், எந்த குரூப் எடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் முதலாவது குரூப் எனப்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் (PCMB) பாடங்கள் அடங்கிய குரூப்பைத் தேர்வு செய்யலாம்.
'மருத்துவம் படிக்க ஆசை, ஆனால் கணக்கு வராது' என்னும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் (PCB) பாடங்கள் அடங்கிய 2ஆவது குரூப்பைத் தேர்வு செய்து படிக்கலாம்.
3வது குரூப்பில் காமர்ஸ் எனப்படும் வணிகவியல் அல்லது அக்கவுண்ட்ஸ் எனப்படும் கணக்குப் பதிவியல் படிக்கலாம். சி.ஏ. எனப்படும் ஆடிட்டர் பணி, பி.காம்., எம்.காம், அரசுப் பணி, வங்கி வேலைகளில் சேர விரும்புவர்கள் இந்த குரூப்பைத் தேர்வு செய்யலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -