NEET Exam 2024: நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: இதோ வழிமுறைகள்!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் என்னும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநீட் தேர்வுக்கு மார்ச் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மே 5ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியாக உள்ளன.
நீட் தேர்வுக்கு 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு.. அதாவது 200 நிமிடங்களுக்கு நீட் தேர்வு நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெறும் தேர்வுக்கு, ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
17 வயது நிரம்பியவர்கள் இளங்கலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது 31.12.2007 அன்று அல்லது அதற்கு முன்னதாகப் பிறந்தவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு குறித்த முழுமையான விவரங்களை அறிய: https://exams.nta.ac.in/NEET/images/neet-ug-2024-draft-ib-09022024.pdf என்ற தகவல் வழிகாட்டியைக் காணுங்கள்.
நீட் தேர்வுக்கான பாடமுறை இதோ!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -