Gold mining: தங்கம் விலை நம்ப முடியாத அளவிற்கு குறைய போகிறதா.? கண்டுபிடிக்கப்பட்ட தங்க மலை- பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக நடுத்தர வர்க்க மக்களால் தங்களது பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு தங்க நகைகளை வாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள். நகைகடைகளில் தங்க நகைகளை வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே எப்போது தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்த்து காத்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல சமூக வலைதளங்களில் பரவிய ஒரு செய்தி தான் தங்க நகை பிரியர்களுக்கு குஷியான தகவலாக மாறியுள்ளது.
உலகத்தில் இதுவரை கண்டுப்பிடிக்காத வகையில் தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது தான் முக்கிய தகவலாகும். ஆமாம்..சீனாவின் பிங்ஜியாங் கவுண்டியில் உள்ள 'வாங்கு' என்ற பகுதியில் தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்தில் ஆயிரம் மெட்ரிக் டன் மேல் தங்கம் இருப்பதாகவும், இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தங்க வயல்களிலேயே இதுதான் மிகவும் பெரியது என கூறப்படுகிறது. ஒரு டன் பாறையை வெட்டி எடுத்தால் அதில் 8 கிராம் தங்கம் கிடைத்தது தான் அதிக மதிப்புள்ள தங்க சுரங்கமாக இருந்து வந்தது. தற்போது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுரங்கத்தில் உள்ள ஒரு டன் பாறையில் 138 கிராம் தங்கம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த தங்கத்தின் மதிப்பு பல லட்சம் கோடி அளவிற்கு என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தங்கத்தை தோண்டி எடுப்பது தான் மிகப்பெரிய சவாலான காரியம் என கூறப்படுகிறது. ஏனெற்றால் இந்த தங்கமானது,நிலத்தில் இருந்து 3 முதல் 4 கி.மீட்டர் ஆழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தங்கம் மிகப்பெரிய ஆழத்தில் இருப்பது மட்டுமில்லாமல் தொழில்நுட்ப சவாலும் உள்ளதாகவும் இதன் காரணமாக தங்கத்தை தோண்டி வெளியே எடுப்பதற்கே 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. தற்போது தங்கத்தை தோண்ட ஆரம்பித்தால் 2035ஆம் ஆண்டுக்கு பிறகே தங்கம் கைகளுக்கு கிடைக்கும் எனவும், அதையும் ஒரே ஆண்டில் எடுக்க முடியாது என கூறப்படுகிறது. ஒட்டுமொத்த உலகத்திற்கும் தற்போது ஒரு ஆண்டில் தேவைப்படும் தங்கத்தின் மதிப்பு 3600 டன்னாக உள்ளது.
ஆனால் சீனா சுரங்கத்தில் இருந்து வருடத்திற்கு 15 முதல் 30 டன் தங்கம் மட்டுமே வெளியே எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே இது ஒட்டுமொத்த தங்க தேவையில் 3 % மட்டுமே உள்ளது. எனவே இப்படி உள்ள நிலையில் எப்படி தங்கத்தின் விலை குறையும் என பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்படியே தங்கத்தை சீனா தோண்டி எடுத்தாலும் அதனை வெளி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவராது எனவும். சீனாவின் மத்திய வங்கியில் தான் சேமித்து வைக்கும் என கூறப்படுகிறது. தற்போது நாட்டில் அதிக பண மதிப்பு உள்ள நாடாக அமெரிக்க உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவிடம் உள்ள தங்கம் தான். எனவே சீனாவின் பண மதிப்பை அதிகரிப்பை அதிகரிக்க சுரங்கத்தில் கிடைக்கும் தங்கத்தை சீனா பொக்கிஷமாக பார்க்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.