Gold Holding Limits:வீட்டில் தங்கம் வைத்திருக்க ஏதேனும் கட்டுப்பாடுகள் இருக்கா?இதைப் படிங்க!
இந்தியாவில் தங்கத்தின் மொத்த உரிமையில் அல்லது வீட்டில் எவ்வளவு தங்க நகைகளை வைத்திருக்கலாம் என்பதற்கும் கடுமையான வரம்பு இல்லை. இருப்பினும், தங்கத்தை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் வருமான ஆதாரத்தை நீங்கள் விளக்க வேண்டிய சில வரம்புகள் உள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநேரடியாக தங்கத்தை சேமிப்பதற்கு இந்தியா பல்வேறு வரம்புகளை அமல்படுத்துகிறது
திருமணமான பெண் ஒருவர் 500 கிராம் வரை தங்க ஆபரணங்கள், நகைகள் வைத்திருக்க அனுமதி உள்ளது. திருமணமாகாத பெண் 250 கிராம் வரை தங்க நகைகளை வைத்திருக்க தகுதியுடையவர்
ஆண் (திருமணமானவர்/திருமணமாகாதவர்) - 100 கிராம் வரை தங்க ஆபரணங்கள், நகைகளை வைத்திருக்க அனுமதி
தங்கம் வாங்கும் திட்டம் இருந்தால் உரிமையாளர்கள் வெளிப்படையாகவும் விதிமுறைகளுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும். விதிமுறைகளுக்கு எதிராக தங்கம் உங்களிடம் இருந்தால் அதன் கொள்முதல் விவரம் இருக்க வேண்டும்.
ரூ. 50 லட்சத்திற்கு மேல் இருந்தால், நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும்போது, உங்கள் வீட்டுச் சொத்துகளின் ஒரு பகுதியாக உங்கள் தங்க உடைமைகளை வெளிப்படுத்துவது முக்கியம். தங்கத்தை நீங்கள் யாரிடமிருந்தாவது தங்கக் கட்டி, நகைகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் வடிவத்தில் பெற்றால், அதன் மதிப்பு 50 ஆயிரம் ரூபாயை கடந்தால் உங்களுக்கு வரி விதிக்கப்படும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -