Second hand Car : செகண்ட் ஹாண்ட் கார் வாங்க போறீங்களா? அதற்கு முன் இதையெல்லாம் கவனிங்க!
செகண்ட் ஹாண்ட் கார் வாங்கும் போது முதலில் நமக்கு தெரிந்தவர்கள் யாரும் கார் விக்கிறார்களா? என்று விசாரிப்பது அவசியம். ஏனென்றால், தெரிந்தவரின் காராக இருந்தால், காரின் நிலைமையை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகார் வாங்கும் போது, காரின் லுக், பெயிண்ட் ஆகியவற்றை பார்க்க வேண்டும். சீராக ஒரே கலரில் பெயிண்ட் உள்ளதா? சொட்டை உள்ளதா? ஸ்க்ராட்ச் உள்ளதா? என்பதையும் ஆராய வேண்டும்.
இன்ஜினை செக் பண்ண வேண்டும். காரை ஸ்டார்ட் செய்யும் போது, வண்டி ஸ்மூத்தாக ஸ்டார்ட் ஆகிவிட்டால், இன்ஜின் நல்ல கண்டிஷனில் உள்ளது என்று அர்த்தம்.
அடுத்து காரின் டயர். சில காரில் முன் டயரை புதிதாக மாற்றி இருப்பார்கள். அப்படி மாற்றி இருந்தால், கார் பல கிலோ மீட்டர் ஓடி இருக்கிறது என்று அர்த்தம். அதே சமயம் நான்கு அலாய் ( Alloy ) வீல்களும் ஒரே மாதிரி இருக்கிறதா? என்பதையும் பார்க்க வேண்டும்
கார் இன்டீரியரையும் (Interior) செக் பண்ண வேண்டும். ஸ்டேரிங் , பேனல், சீட் குஷன், சீட் கவர் எதுவும் பழுதாகியுள்ளதா அல்லது புதிதாக மாற்றப்பட்டுள்ளதா? என்பதை கவனிக்கவும்.
மேலும் காரின் உட்புறத்தை கவனிக்க வேண்டும். காரின் உள் நல்ல மனம் வந்தால் கார் பயன்பாட்டில் உள்ளதாக அர்த்தம். கெட்ட வாசனை அல்லது அடைத்து வைத்த துர்நாற்றம் வந்தால் கார் ரொம்ப நாளாக பயன்படுத்தாமல் இருக்கிறது என்று அர்த்தம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -