Mahindra Thar E : ஆஃப் ரோடின் அரசன் மஹிந்திரா வெளியிட்ட புதுமாடல் கார் என்ன தெரியுமா?
கம்பீரமான வடிவமைப்பு, ஆஃப் ரோடிலும் அநாயசமாக செல்லும் திறன் ஆகியவற்றால், பயணாளர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது மஹிந்திரா நிறுவனம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுன்னதாக, தார் ஈ காரை ரோட்டில் டெஸ்ட் ட்ரைவ் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆனது.
தற்போது நேற்றைய தினம் தென் ஆப்ரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் மஹிந்திரா நிறுவனம் தங்களின் புதிய காரான தார் ஈ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய கார் மஹிந்திரா நிறுவனத்தின் பழைய மாடலான தாரை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது. அதேசமயம் சில மாற்றங்களையும் பெற்றுள்ளது.
இந்த புதிய தார் ஈ மாடல் மின்சாரத்தை கொண்டு இயங்கக்கூடியது. அதுமட்டுமல்லாமல் 5 கதவுகள், காரின் உட்புறத்தில் அதிக இருக்கை வசதிகள், சதுர வடிவிலான முன்புற லைட்டுகள் ஆகிய மாற்றங்களை பெற்றுள்ளது தார் ஈ.
இந்த காரின் உற்பத்தி 2025ல் தொடங்கும் என்றும் அதோடு இந்த கார் 2026ல் சந்தை விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -