Mileage Bikes:ஒருமுறை டேங்க் ஃபில் பண்ணா போதும்! அதிக மைலேஜ் தரும் பைக்குகளின் லிஸ்ட் இதோ..!
டி.வி.எஸ். ஸ்போர்ட் - இது லிட்டருக்கு 75 கிமீ மைலேஜை வழங்குகிறது. 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட இதன் பெட்ரோல் டேங்கை ஒருமுறை நிரப்பினாலே, சுமார் 750 கி.மீ., தூரம் வரை பயணிக்கலாம். இந்த பைக் இந்தியாவில் ரூ.70,773 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஹோண்டா லிவோ இந்த பைக், லிட்டருக்கு 74 கிமீ மைலேஜ் வழங்குகிறது. 9 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த வாகனத்தின் எரிபொருள் டேங்கை, ஒருமுறை நிரப்பினால் இடைநிற்றல் இன்றி 666 கிமீ வரை பயணம் செய்யலாம்.
பஜாஜ் பிளாட்டினா பிராண்டின் பிரபலமான பைக்குகளில் ஒன்றாகும். இந்த பைக் லிட்டருக்கு சுமார் 73 கிமீ மைலேஜ் வழங்குகிறது.
Hero HF டீலக்ஸ் பிராண்டின் அதிக விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாகும். இந்த பைக் லிட்டருக்கு 70 கிமீ மைலேஜை வழங்குகிறது.
ஹோண்டா SP125 சிறந்த தோற்றமுடைய வாகனமாகும். இந்த பைக் லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் வழங்குகிறது.
இந்த ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக் லிட்டருக்கு 83.2கிமீ மைலேஜை வழங்குகிறது. 9.8 லிட்டர் கொள்ளளவு கொண்ட இதன் டேங்கை நிரப்பினால், ஒரே அடியாக 815 கிமீ தூரம் வரை செல்லும்.