Unlucky Things : துரதிஷ்டத்தை ஈர்க்கும் இந்த பொருட்களை வீட்டில் வைக்காதீங்க!
சப்பாத்தி கள்ளி : முட்களை கொண்ட செடிகள் கெட்ட ஆற்றலை ஈர்க்கும் என்பது நம்பிக்கை. மன அழுத்தம், பதற்றம், உறவுகளில் விரிசல் ஆகியவை உண்டாகுமாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபழைய நாட்காட்டி : உடைந்த கடிகாரத்தை போல பழைய நாட்காட்டியும் வளர்ச்சியையும் செழிப்பையும் தடுத்துவிடும் என்பது நம்பிக்கை. இறந்த காலத்தில் நடப்பவையே மீண்டும் மீண்டும் நடக்குமாம். ஏதோ ஒரு குறை வாழ்க்கையில் இருந்துக்கொண்டே இருக்குமாம்.
எதிர்மறையான சம்பவங்களை குறிக்கும் கலை பொருட்கள்/ ஓவியங்கள் : இது வீட்டில் உள்ள நல்ல ஆற்றலையும் அமைதியை கெடுக்குமாம். இதை தினமும் பார்ப்பதால் உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாமலே அதில் இருக்கும் சம்பவம் நடக்கலாம் என சொல்லப்படுகிறது.
ஆடிக்கொண்டே இருக்கும் நாற்காலி : ஆடிக்கொண்டே இருக்கும் நாற்காலிகள், வாழ்க்கையில் நிலையற்ற சூழலை உண்டாக்குமாம். எந்த விஷயமாக இருந்தாலும் அதற்கு அஸ்திவாரம் மிகவும் முக்கியம். இந்த நாற்காலிகளை வீட்டில் வைத்தால் தாங்கிபிடிக்கும் அஸ்திவாரமே அமையாதாம்.
பட்டுப்போன செடிகள் : இந்த பட்டுப்போன செடிகள் உயிரற்ற ஆற்றலை ஈர்க்குமாம். இது வாழ்க்கையில் துரதிஷ்டத்தை கொண்டு வருமாம்
உடைந்த/ஓடாத கடிகாரம் : உடைந்த பொருட்கள் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்பது நம்பிக்கை. இதனால் உங்கள் வாழ்வில் எந்தவிதமான வளர்ச்சியையும் காண முடியாதாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -