Color Astrology : இந்த தினத்தன்று எக்காரணம் கொண்டும் இந்த நிற உடையை அணியாதீர்கள்!

நிலாவுக்கு உரிய திங்கட்கிழமை உணர்ச்சிகளையும் மென்மைத்தன்மையையும் குறிக்கிறது. அதனால் துணிவையும் கோவத்தையும் வெளிப்படுத்தும் சிவப்பு மற்றும் கருப்பு நிற உடைகளை அணியக்கூடாது என சொல்லப்படுகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
செவ்வாய் கிரகத்திற்கு உரிய செவ்வாய்கிழமை அதிகாரம், கோவம் ஆகிய இரண்டு குணங்களை குறிக்கிறது. நிலைத்தன்மை, சமன், நம்பிக்கை ஆகிய குணங்களுக்கு உரிய பச்சை நிற உடைகளை அணியக்கூடாது என சொல்லப்படுகிறது

புதன்கிழமையை ஆட்சி செய்யும் புதன் கிரகம் நிடுநிலையான கிரகமாக இருப்பதால் எந்த நிரத்தில் வேண்டுமானாலும் உடை அணியலாம்
வியாழக்கிழமையை ஆட்சி செய்யும் வியாழன் கோளுக்கு, சுக்கிரன் எதிரி என்பதால் வெள்ளை, பிங்க் நிற உடைகளை அணியக்கூடாது என சொல்லப்படுகிறது
வெள்ளிக்கிழமையை ஆட்சி செய்யும் சுக்கிரன் ஆடம்பரம், பணம், காதல் ஆகியவற்றை குறிக்கிறது. இவை அனைத்தும் ஞானத்தை குறிக்கும் வியாழன் கோளுக்கு எதிராக இருப்பதால் மஞ்சள் நிற உடைகளை அணியக்கூடாது என சொல்லப்படுகிறது
சனிக்கிழமையை ஆட்சி செய்யும் சனிக்கு, சூரியன் மற்றும் திங்கள் எதிரி கோள்கள் ஆகும். அதனால் வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு நிற உடைகளை அணியக்கூடாது என சொல்லப்படுகிறது
சூரியன் ஆட்சி செய்யும் ஞாயிற்றுக்கிழமை, சனிக்கு எதிரானது அதனால் கருப்பு நிற உடைகளை அணியக்கூடாது என சொல்லப்படுகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -