இந்தியாவில் இ-வர்த்தகத்தில் பல தளங்கள் ஈடுபட்டு லாபத்தை ஈட்டி வருகின்றன. இந்திய இ-வர்த்தக தளங்களிலிருந்து பல வெளிநாடு மக்களும் சில பொருட்களை வாங்கி வருகின்றனர். இவ்வாறு வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் இ-வர்த்தக தளங்கள் தொடர்பாக அமெரிக்கா அவ்வப்போது சில ஆய்வு செய்து வருகிறது. 


 


இந்நிலையில் சமீபத்திய ஆய்வில் அமெரிக்கா வர்த்தக துறை ‘இந்தியாமார்ட்’ என்ற இந்திய தளம் போலியான பொருட்களை விற்பனை செய்யும் தளங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா வர்த்தக துறை அறிவிப்பில், “இந்தியாமார்ட் தளத்தில் போலியான பொருட்கள் அதிகமாக விற்கப்படுகின்றன. எல்க்ட்ரானிக்ஸ், மருந்து பொருட்கள் மற்றும் துணி பொருட்கள் ஆகியவற்றில் சில போலியான பொருட்கள் விற்கப்படுகின்றன. மேலும் இத்தளத்தில் விற்பனை செய்பவர்களின் விவரம் முறையாக சரிபார்க்கப்படவில்லை. அத்துடன் போலியாக விற்கப்படும் பொருட்களுக்கு எதிரான சரியான நடவடிக்கை எடுக்கும் முறையும் இந்த தளத்தில் இல்லை. 


 


ஏனென்றால் இந்த தளத்தில் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் தங்களுடைய புகார்களை அளிக்க இருக்கும் முறை மிகவும் கடினமாக உள்ளது. இதில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க நீண்ட நேரம் எடுக்கிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. 




இந்த அறிக்கையில் இந்தியாமார்ட் தளத்துடன் சேர்ந்து அலிபாபா, தவுபோ, சிங்கப்பூர் ஷாப்பீ உள்ளிட்ட சில தளங்களும் இடம்பெற்றுள்ளன. அந்த தளங்களில் அதிகமாக போலியான பொருட்கள் விற்கப்படுவதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.


 


இந்த அறிக்கை தொடர்பாக இந்தியாமார்ட் தளம் சார்பில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “இந்தியாமார்ட் தளம் எப்போதும் நேர்மையான தொழில்முறையை கடைபிடித்து வருகிறது. மேலும் எங்களுடைய தளத்தில் எந்தவித சட்டவிரோத விற்பனை மற்றும் போலி பொருட்களின் விற்பனைக்கும் நாங்கள் இடம் கொடுக்கவில்லை. எப்போது சட்ட திட்டங்களை சரியாக கடைபிடித்து நடக்கும் தளம் எங்கள் தளம். இந்த அறிக்கை தொடர்பாக அமெரிக்கா துறையிடன் பேச உள்ளோம். எங்களுடைய தளத்தில் எந்தவித பிரச்னை உள்ளது என்பதை அவர்களிடம் கேட்டு சரி செய்ய உறுதியளிப்போம்” எனக் கூறியுள்ளது. 


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: ஏர்டெல், ஜியோ, வோடஃபோன்... தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்கும் 20 ப்ளான்கள் இதோ