இதுவரை இல்லாத மிகப்பெரிய விண்மீனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 3 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள "அல்சியோனஸ்" என்பது அது. இது 16.3 மில்லியன் ஒளியாண்டுகள் நீளம் அதாவது 5 மெகாபார்செக்ஸ் (Megaparsecs) தூரம் வரை பரவியுள்ள ஒரு மாபெரும் விண்மீன் ஆகும்.
இந்த விண்மீனின் நீளம் வியக்க வைக்கிறது. இந்த நீளம் எவ்வளவு பெரியது என்பதைப் புரிய வைக்க வேண்டுமானால், நமது பால்வீதியின் நீளம் சுமார் 100,000 ஒளி ஆண்டுகள். பூமியில் இருந்து புலப்படும் அருகாமையில் உள்ள பிரபஞ்ச விளிம்பின் தூரம் 45.7 பில்லியன் ஒளி ஆண்டுகள். இந்த அல்சியோனஸ் இவற்றை எல்லாம் விட நீளமானது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அல்சியோனஸ் ஏன் இவ்வளவு பெரியது?
அந்த விண்மீன் மிகப்பெரிய அளவு இருந்தபோதிலும், நமது பூமி இருக்கும் பால்வீதியைப் போலவே சாதாரணமானது. அல்சியோனஸ் போன்ற மாபெரும் விண்மீன்கள் ஒரு தலைமை பால்வீதியைக் கொண்டவை இந்த பால்வீதியுடன் அதன் மையத்தில் இருந்து வெளியேறும் கொல்லாஸல் ஜெட் மற்றும் லோப்கள் உரசும்போது ரேடியோ கதிர்களை உமிழ்ந்து எலக்ட்ரான்களை நகர்த்துகின்றன இதன்வழியாக விண்மீன் விரிவடைகிறது என்கின்றன வான் அறிவியல் ஆய்விதழ்கள்.
இந்த ரேடியோ லோப்கள் பால்வீதியின் மையத்தில் அமைந்துள்ள மிகப்பெரும் கருந்துளையின் செயல்பாட்டால் உருவாகின்றன. இருந்தாலும் இதுபோன்ற சில விண்மீன் திரள்கள் ஏன் இவ்வளவு பெரிய அளவில் வளர்கின்றன என்பது விஞ்ஞானிகளுக்கு இதுவரை புரியவில்லை.
இந்த ராட்சத விண்மீன் வளர்ச்சிக்கு காரணமான சூழலைக் கண்டறிய முயன்ற விஞ்ஞானிகள் LOw Frequency ARray (LOFAR) என்னும் முறை மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி ராட்சத விண்மீண்கள் உருவாகும் முறையைக் கண்டறிந்தனர்.ஆச்சரியமாக, 4.99 ± 0.04 மெகாபார்செக்குகள் நீளம் கொண்ட ஒரு விண்மீனின் அமைப்பை இதன்மூலம் கண்டறிந்ததாக விஞ்ஞானிகள் சொல்லி வந்தனர். இந்த விண்மீண் சூரியனை விட 240 மடங்கு எடை அதிகமானது மேலும் அது இருக்கும் பால்வீதி மையத்தில் உள்ள கருந்துளை நமது பால்வீதியை விட 400 மடங்கு எடை அதிகமானது எனக் கூறுகின்றனர்.