Watch Video: இரட்டை தலை பாம்பு, பசியுடன் காத்திருக்கும் முதலை.... வளர்ப்பு பிராணிகளை அறிமுகப்படுத்தும் பெண் காப்பாளர்!

முதலைகளின் காதலன்’ எனக் கொண்டாடப்பட்ட ஸ்டீவ் இர்வின் இந்நேரம் இருந்திருந்தால் இந்தப் பெண்ணை உச்சி முகர்ந்து கொண்டாடியிருப்பார் என நெட்டிசன்கள் வீடியோவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continues below advertisement

நம் ஊரில் ரீல்ஸ், புதுப்புது ட்ரெண்ட் என இன்ஸ்டாவில் இளைஞர்கள் கோலோச்சும் நிலையில், வெளிநாடுகளில் சாகச விரும்பிகள்,  மிருகக்காட்சி சாலை காப்பாளர்கள் என சுவாரஸ்யமான வேலைகளில் ஈடுபடும் நபர்கள் சமீபகாலமாக ட்ரெண்ட் ஆகி வருகின்றனர்.

Continues below advertisement

அந்த வகையில் மிருகக்காட்சி சாலை ஒன்றின் பெண் காப்பாளர் பசியுடன் இருக்கும் முதலையை அறிமுகப்படுத்தும் வீடியோ காண்போரை ஆச்சரியப்படுத்தி வைரலாகியுள்ளது.
 
The reptile zoohe reptile zoo எனப்படும் ஊர்வனவற்றுக்கான இந்த இன்ஸ்டா பக்கத்தில், பசியுடன் காத்திருக்கும் முதலைகளை விளையாட்டாகவும் அதே சமயம் கவனமாகவும் பெண் காப்பாளர் ஒருவர் டீல் செய்யும் இந்த வீடியோ காண்போரின் முதுகுகளை சில்லிட வைக்கும் வகையில் உள்ளது. 

 

இந்த முதலைகள் உள்பட இங்கிருக்கும் பெரும்பாலான பிராணிகளை இப்பெண் காப்பாளர் தான் அவற்றின் சிறு வயது முதல் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், ‘முதலைகளின் காதலன்’ எனக் கொண்டாடப்பட்ட ஸ்டீவ் இர்வின் மட்டும் இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால் இந்தப் பெண்ணை உச்சி முகர்ந்து கொண்டாடியிருப்பார் எனவும் வீடியோவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

இதே போல் இரட்டைத் தலை பாம்பு, உடும்பு, மலைப்பாம்புகள், பச்சோந்தி என இந்த மிருகக்காட்சி சாலையில் பாதுகாக்கப்படும் விலங்குகள் அனைத்துடனும் பெண் காப்பாளர் பழகும் வீடியோக்கள் தொடர்ந்து இந்தப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்று வருகின்றன.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola