ஆஸ்திரேலியாவில் வேண்டுமென்ற கொடூரமாக கங்காருவைக்கொன்ற இரு இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் அடையாளமாகவும் அந்நாட்டின் தேசிய விலங்காகவும் கங்காரு விளங்கி வருகிறது. தத்தி தந்தித்தாவிச் செல்லும் கங்காருவைப்பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். அதோடு தனது குட்டிகளைத் தாங்கி செல்லும் பாசமே அனைவரையும் இதுவரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இந்த சூழலில் தான் கடந்த வாரத்தில் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் 14 கங்காருக்கள் இறந்து கிடந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையில் இந்த வழக்கில் இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும் விசாரணையின் போது, 17 வயதுடைய சிறுவர்கள் வேண்டுமென்ற கங்காருவை அடித்துக்கொன்றதாகக் கூறப்படுகிறது. ஏன் இவ்வாறு மேற்கொண்டார்கள்? காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில். அடுத்த மாதம் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகத்திற்கிடமான கங்காருவின் மரணம் குறித்து சிசிடிவி காட்சிகளின் உதவியோடு அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. தேசிய விலங்கான கங்காருக்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் வன விலங்கு ஆர்வலர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக “மனசாட்சி இல்லாத முட்டாள்கள் என்றும், மிருகங்களைக்கொன்றவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை டிவிட்டரில் பதிவிட்டுவருகின்றனர்.
மேலும் ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் சட்டத்தின்படி, விலங்குகளைக்கொடுமைப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் $15,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் பல கங்காருக்கள் உள்பட பல வன விலங்குகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதற்குள்ளாகவே தற்போது 14 கங்காருக்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்