ஒரு சில காரீயங்களை நாம் விளையாட்டாக செய்யும் போது அது மிகவும் விபரீதத்தில் முடிந்துவிடும். அப்படி ஒருவர் விளையாட்டாக செய்த செயல் மிகவும் பெரியளவில் ஆபத்தில் முடிந்துள்ளது. யார் அவர்? அவர் செய்தது என்ன? அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விளையாட்டாக தன்னுடைய சிறுநீர்குழாயில் 6 சிவப்பு காராமணியை போட்டுள்ளார். அந்த காராமணியை சுய இன்பம் செய்து வெளியே எடுத்துவிடலாம் என்று எண்ணியுள்ளார். ஆனால் அப்படி அவரால் எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக அவர் கடும் வலியில் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த பிரச்னைக்கு தீர்வு காண அவர் மருத்துவமனை சென்றுள்ளார். 


அங்கு அவர் மருத்துவர்களிடம் தனக்கு சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டுள்ளது என்று முதலில் கூறியுள்ளார். பின்னர் மருத்துவர்கள் கேள்வி கேட்க தொடங்கிய உடன் தான் விளையாட்டாக செய்த காரீயத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அவரின் செயலை கேட்ட மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர். அப்போது அவருடைய சிறுநீர்குழாய்க்குள் 15 மில்லிமீட்டர் அளவிற்கு 6 சிவப்பு காராமணிகள் சிக்கி இருந்தது கண்டறியப்பட்டது. 




அவற்றில் ஒரு காராமணியை மட்டும் மருத்துவர்கள் லாவகமாக எடுத்துள்ளனர். மீதமுள்ள 5 காராமணியை மருத்துவர்களால் எடுக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அவருக்கு உடனடியாக ஒரு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதில் அவருடைய சிறுநீர்குழாயின் துவாரத்தை சற்று பெரிதாக்கி எஞ்சிய காராமணியை வெளியே எடுத்துள்ளனர். அவர் விளையாட்டாக செய்த செயல் அவருடைய உயிருக்கே ஆபத்தில் முடிந்துவிடும் வகையில் அமைந்தது. 


இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள், “ஒரு சிலர் மனநல கோளாறு காரணமாக இந்த மாதிரியான விபரீத செயலில் ஈடுபடுகிறார்கள். அத்துடன் கலவி குறித்து சரியான புரிதல் இல்லாதவர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு முறையான மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும். அப்போது தான் அவர்கள் இதுபோன்ற செயல்களில் இனிமேல் ஈடுபட மாட்டார்கள். அந்த நபருக்கு சற்று வலி இன்னும் இருக்கிறது. அவருக்கு தேவையான மருத்துவ ஆலோசனையையும் நாங்கள் தற்போது வழங்கியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர். 


அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த நபர் ஒரேநாளில் வீடு திரும்பினார். இப்படி விளையாட்டாக நாம் உடல் தொடர்பாக செய்யும் காரீயம் நம்மை பெரிய சிக்கில் கொண்டு நிறுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறப்பான சான்றாக அமைந்துள்ளது. நமது மனதை அலைபாய விடாமல் சரியான உடற்பயிற்சி மற்றும் தியானம் அல்லது யோகா ஆகியவற்றை செய்து இதுபோன்ற மன சிக்கல்கள் வராமல் பார்த்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. 


மேலும் படிக்க:ஆஃப்கானில் சிறைபிடிக்கப்பட்டார்களா இந்தியர்கள்? - மறுத்த தலிபான்