அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் வசிக்கும் இந்திய பெண்களை கொடூரமாக இனவெறியுடன் தாக்கி, வசவு சொற்களால் திட்டிய அமெரிக்க பெண்ணை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். 


என்ன நடந்தது?


டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பெண்கள் இரவு சாப்பாட்டை ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு அங்குள்ள கார் பார்க்கிங்கில் தங்கள் காரை எடுக்க வந்த நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. கார் பார்க்கிங் வழியே வந்த அமெரிக்க பெண் ஒருவர், அந்த நான்கு பெண்களை வழிமறித்து ஆவேசமாக தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசியுள்ளார். இதனை அங்கிருந்த பெண்மணியே வீடியோ எடுத்து வெளியிட்டு உள்ளார். இந்த அதிர்ச்சிகரமான தாக்குதலின் வீடியோ தற்போது அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய-அமெரிக்க சமூகத்தினரிடையே வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை வெளியிட்ட நபர், "இந்த சம்பவம் டெக்சாஸின் டல்லாஸில் எனது அம்மாவும் அவரது மூன்று நண்பர்களும் இரவு உணவிற்குச் சென்றபோது நிகழ்ந்தது" என்று எழுதினார்.







இந்தியர்களை பிடிக்கவில்லை


அந்த வீடியோவில் அமெரிக்க பெண்மணி, அந்த பெண்களை நோக்கி, "இந்தியர்களை எனக்கு பிடிக்கவில்லை. இந்தியர்கள் அனைவரும் சிறந்த வாழ்க்கை வேண்டி அமெரிக்காவிற்கு வருகிறார்கள். நான் எங்கே போனாலும், நீங்கள் இந்தியர்கள்தான் எல்லா இடங்களிலும் இருக்கிறீர்கள். இந்தியாவில் எல்லாம் நன்றாக இருந்தால், நீங்கள் ஏன் இங்கே வரப்போகிறீர்கள்? இந்தியாவுக்கேத் திரும்பிச் செல்லுங்கள்" என்று கத்தினார்.


தொடர்புடைய செய்திகள்: போதை.... கருகலைப்பு...! பயில்வான் வாயில் சிக்கிய புது பபிள்கம் பிக் பாஸ் பிரபலம் ஓவியா!


சரமாரியாக தாக்கிய பெண்மணி


பேசியபின் அவர்களை அவர் சரமாரியாக தாக்க தொடங்கினார். அதுவும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு நடந்துள்ளது. இந்திய பெண்களை அவர்கள் இந்தியர்கள் தான் என்று அவர்கள் பேசும் ஆங்கில மொழி உச்சரிப்பு முறையை வைத்து கண்டறிந்துள்ளார். மேலும் அந்த நேரத்தில் அவர் கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், அவர்களை சுட முயற்சி செய்ததாகவும் வந்துள்ள செய்தி பல வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.






பெண்மணி கைது


இதனை தொடர்ந்து இந்திய பெண்களை தாக்கிய அமெரிக்க பெண்ணை டெக்சாஸில் உள்ள காவல் துறையினர் இன்று கைது செய்தனர். விசாரணையில், அந்த பெண் மெக்சிகோவை பூர்விகமாக கொண்டவர் என்றும், அவரது பெயர் எஸ்மரால்டா அப்டன் என்றும் தெரியவந்துள்ளது. அவர் நான்கு இந்திய-அமெரிக்க பெண்களைக் கொண்ட குழுவைத் தாக்கி, இனரீதியாக வசைபாடி உள்ளார் என்பதும் உறுதியானது. இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் அங்கு வாழும் வெளிநாட்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.