நெரிசலான ரயிலின் மேற்கூரையில் பெண் ஒருவர் ஏற முயலும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. 'fresh_outta-stockz' என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோ வெளியிடப்பட்டது.


 






வீடியோவில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வங்கதேசத்தில் உள்ள இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயற்சிப்பதைக் காணலாம். ஒருவேளை, அவருக்கு ரயிலில் இருக்கை கிடைக்காமல் இருந்திருக்கலாம். அதிர்ச்சியூட்டும் வகையில், ரயில் நடைமேடையில் இருந்து புறப்படுவதற்கு முன்பே, ரயில் கூரையில் பலர் அமர்ந்திருக்கின்றனர்.


அந்தப் பெண், ரயில் மேற்கூரையின் உச்சியில் ஏற பல முயற்சிகளை மேற்கொள்வதை அந்த வீடியோவில் காணலாம். அவர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸின் ஜன்னல் விளிம்பில் நிற்கிறார். ஏற்கனவே மேலே அமர்ந்திருந்த மற்றவர்கள் அவரை மேலே இழுக்க முயல்கின்றனர்.


கடுமையாக முயற்சித்த போதிலும் மக்கள் உதவி செய்த போதிலும், அந்தப் பெண் மேலே ஏற முடியவில்லை. வீடியோவின் முடிவில், ஒரு ரயில்வே போலீஸ், ரயிலின் மீது அந்த பெண் ஏறுவதைத் தடுக்க அந்த இடத்திற்கு வருவதை காணலாம். இறுதியாக, மேற்கூரையில் ஏற முடியாமல், அந்த பெண் அங்கிருந்து சென்றுவிடுகிறார்.


மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், இம்மாதிரியான செயல்கள் நடைபெறலாம். ஆனால், ரயிலில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். இம்மாதிரியான செயல்களில் எக்காரணத்திற்காகவும் ஈடபடகூடாது.


இந்த வீடியோ ஆகஸ்ட் 10 அன்று வெளியிடப்பட்டது. சமூக வலைதளங்களில், சில பயனர்கள் இதுபோன்ற நிலைக்கு மக்கள்தொகையைக் குற்றம் சாட்டினர். இந்த வீடியோ 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 360,000க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்துள்ளது.