கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை பரவி வருகிறது.

Continues below advertisement




இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 12 கோடியே 94 லட்சத்து 51 ஆயிரத்து 930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 27 ஆயிரத்து 406  ஆக அதிகரித்துள்ளது.


குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 கோடியே 43 லட்சத்து 99 ஆயிரத்து 818ஆக உள்ளது . கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 2வது இடத்திலும் இந்தியா 3வது இடத்திலும் உள்ளன.