அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கஞ்சா பயன்படுத்த சட்டப்படி அனுமதி உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் முக்கிய மாகாணமான நியூயார்க்கிலும் கஞ்சா பயன்பாடை சட்டப்பூர்வமாக்க நீண்டநாள் கோரிக்கை இருந்துவந்தது.


இதையடுத்து, நியூயார்க் மாகாண செனட் அவையில் மாரிஜூவானா கஞ்சாவை பயன்படுத்துவதற்கான சட்டமசோதா நேற்று கொண்டுவரப்பட்டது. அப்போது, அந்த மசோதா 40-க்கு 23 வாக்குகள் அளிக்கப்பட்டது. அதே மசோதா சட்டமன்றத்திலும் 100-க்கு 49 வாக்குகள் பெற்றது. இந்த சட்டம் விரைவில் நியூயார்க் மாகாணத்தில் அமல்படுத்தப்படவுள்ளது.




இந்த சட்டம் அமலுக்கு வந்தபிறகு, 350 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாயாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சட்டம் அமலுக்கு வந்தால், அனுமதிக்கப்பட்ட வயது வந்தவர்கள், 3 அவுன்ஸ் கஞ்சாவரை வைத்திருப்பதற்கான அனுமதி வழங்கப்படும். இந்த புதிய சட்டத்தின்படி கஞ்சா தயாரிப்புக்கு 13 சதவீத வரிவிதிக்கப்பட உள்ளது.