ஹரித்வாரில் நடைபெற்ற வெறுப்பு பேச்சைக் கண்டிக்கும் விதமாக, இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் அரசு தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளது. 


உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த டிசம்பர் 17 முதல் 19  வரை மூன்று நாட்கள்  நடைபெற்ற தரம் சன்சத் என்ற இந்துமத மாநாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் வன்முறை தூண்டும் விதமாக பேசியதாக தகவல் வெளியாகயுது. 


இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்து அமைப்புகளைச் சேர்ந்த மதவாதிகள் அத்துனை பேரும் குறுகிய நோக்கில் பாரபட்சமான, அருவருக்கத்தக்க கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.  இந்த மாநாட்டில், டெல்லி பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் அஷ்வினி உபதயாவும் கலந்து கொண்டிருந்தார். 


 






இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இந்துத்துவ ஆதாரவாளர்  நரசிங்கானந்த், '2029-ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக ஒரு இஸ்லாமியர்' என்ற கருப்பொருள்தான் இந்த மாநாட்டின் முக்கியமான விஷயம். இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்த,  ஏழெட்டு ஆண்டுகளில் சாலைகளின் நாம் பார்க்கக்கூடிய  மனிதர்களெல்லாம் இஸ்லாமியராகத்தான் இருக்கமுடியும் 


 



 நரசிங்கானந்த்


2029-ஆம் ஆண்டில் இஸ்லாமியர் ஒருவர் நாட்டின் பிரதமரானால் என்ன நடக்கும்? இஸ்லாத்தின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இதற்கு பதில் கிடைக்கும். நாட்டைக் கைப்பற்றிய 20 ஆண்டுகளில் 50% இந்துக்கள் மதம் மாற்றப்படுவார்கள், 40% இந்துக்கள் கொல்லை செய்யப்படுவார்கள். எஞ்சிய 10% பேரும் அமெரிக்கா, கனடா, லண்டன், ஐரோப்பா (அ) இந்தியாவில் உள்ள ஐநா அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். மடங்கள் இருக்காது, கோவில்கள் இருக்காது.  தாய்மார்களும், சகோதரிகளும் பாலியல் வல்லுறவுக்காக சந்தையில் விற்கப்படுவார்கள்"என்றும் தெரிவித்தார். 


சங்கராச்சார்யா பரிஷத் என்ற அமைப்பின் நிறுவனர் சுவாமி ஆனந்த் ஸ்வரூப் கூறினார்: "அரசுகள் எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்றால், 1857 கிளர்ச்சியை விட பயங்கரமான போரை நடத்துவோம்" என்று மிரட்டம் விடுத்தார். 


பாகிஸ்தான் அரசு கண்டனம்: 


இந்நிலையில், நேற்று, பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரியை அழைத்த பாகிஸ்தான் அரசு, " ஹரித்வார் தரம் சன்சத் நிகழ்வைப் பார்க்கும் போது, இஸ்லாமிய சிறுபாண்மையினர் மீது வெறுப்பு இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. இந்தியாவில் வாழும் இஸ்லாமிய சிறுபான்மையினர்கள் எதிர்காலம் குறித்து கவலை கொள்கிறோம்.  


"வெறுப்பை உமிழ்ந்து சிறுபான்மையினருக்கு எதிரான பரவலான வன்முறை சம்பவங்கள் குறித்து இந்தியா விசாரணை செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்துள்ளது.